கரூர் ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பிகை உடனுறை

கரூர் பெரிய ஆண்டாங் கோயில் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் சுவாமி ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு அன்னாஅபிஷேக விழா 100 கிலோ அன்னத்தால் சிறப்பு அலங்காரம்.

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் அன்னாஅபிஷேக நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கரூர் பெரிய ஆண்டாங் கோவில் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி ஆலய மூலவர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, அரிசி மாவு பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று

 

அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் சிறப்பு யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்தை ஆலய சிவாச்சாரியார் தலையில் சுமந்தவாறு ஆலயம் வளம் வந்த பிறகு மூலவர் காசி விஸ்வநாதர் மற்றும் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்த பிறகு 100 கிலோ அன்னத்தால் சிறப்பு அலங்காரம் நடைபெற்று தொடர்ச்சியாக சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினர்.

பின்னர் தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றதுகரூர் ஆண்டாங் கோவில் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பிகை உடனுறை காசி விசுவநாதர் ஆலயத்தில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.அதை தொடர்ந்து நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Previous articleகரூரில் நாளை திமுக முப்பெரும் விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் பணிகள்
Next articleதிண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மத நல்லிணக்க கந்தூரி விழா 20,000 பேருக்கு அன்னதானம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here