திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மத நல்லிணக்க கந்தூரி விழா 20,000 பேருக்கு அன்னதானம்.
திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள தனியார் திருமண மஹாலில் மத நல்லிணக்க கந்தூரி விழா நடைபெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த கந்தூரி விழாவை அப்பகுதியை சேர்ந்த கரீபுன் நவாஸ் கந்தூரி 20 நண்பர்கள் சேர்ந்த குழு நடத்தி வருகின்றனர். 8வது ஆண்டான இந்த வருடம் கரீபுன் நவாஸ் கந்தூரி குழு சார்பில் இன்று 08.11.25 காலை 7 மணி அளவில் கந்தூரி விழா துவங்கியது.
இந்த கந்தூரி விழாவில் ஜாதி, மத பேதம் இன்றி சுமார் 20000 க்கும் மேற்ப்பட்ட நபர்களுக்கு சுட சுட பிளேன் பிரியாணி மற்றும் தால்சா மற்றும் கேசரி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேகம்பூர், நத்தர்ஷா தெரு, ஜமால் தெரு, ஜின்னாநகர், பூச்சி நாயக்கன்பட்டி, யூசிப்பியா நகர் உட்பட சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஜாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து பாத்திரங்களில் உணவுகளை வாங்கிச் சென்றனர்.








