கரூர் மூக்கணாங்குறிச்சி எல்லைமேடு அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு ஐப்பசி மாத சிறப்பு அபிஷேகம்

கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி கிராமம், எல்லைமேடு அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு ஐப்பசி மாத சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாளை உடுத்தி, வண்ண மாலை அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

அது தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர், மூக்கணாங்குறிச்சி கிராமம், எல்லமேடு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு நடைபெற்ற ஐப்பசி மாத சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.








