பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் கண் தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
கரூர் பன்னாட்டு லயன் சங்கம் மற்றும் அரிமா சங்கங்கள் சார்பில் பார்வை இழந்தவர்களுக்கு உதவுவதற்காக கண்தானத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கரூர் செங்குந்தபுரம் பகுதியில் இருந்து பேருந்து நிலையம் ரவுண்டானா,ஜவகர் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

என்.எஸ்.எஸ் மாணவர்கள்,கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு

விழிப்புணர்வு பேரணியில் உங்கள் கண் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும், கண் தானம் செய்யுங்கள், பார்வையற்றோருக்கு பார்வை கொடுங்கள்

கண் தானம் செய்யுங்கள் ஒருவரின் வாழ்க்கை ஒளிர செய்யுங்கள் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவ மாணவிகள் கையில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.








