கரூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் மதியழகன் தனது மனைவியுடன் வருகை தந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 30 ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், கரூர் தொகுதியில் அரசியல் களம் களைகட்டியுள்ளது. கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில்,
இன்று தமிழக வெற்றிக் கழக கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மதியழகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் வருகை புரிந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன் அவரது மனைவியும் வருகை தந்தார். (கரூர் கூட்ட நெரிசல் 41 பேர் உயிர்யிழப்பு விவாரத்தில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது)
வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தைச் சுற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, வேட்புமனுத் தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 100 மீட்டர் எல்லைக்குள் 3 வாகனங்கள் மற்றும் வேட்பாளரைச் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.









