குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவிலில்
பெரியநாயகி உடனுறை சிவபுரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

திருக்கோவில் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கோவிலாகும்.கோவிலில் ஆண்டு தோறும் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் நடராஜருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம்
செய்யப்பட்டு மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளி அம்பாளுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து மாலை மண்டபத்திலிருந்து நடராஜர் வெளி மண்டபத்திற்கு வந்து அங்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து கோவிலை சுற்றி வளம் வந்தார்.

நடராஜர் அம்பாளுடன் ஏற்பட்ட ஊடல் காரணமாக கருத்து வேறுபாடு வந்து பின்னர்
சுந்தரர் காடவர்கோன் ஆகியோர் சமரசம் செய்து வைக்கும் காட்சி நடைபெற்றது.

இறுதியில் காடவர்கோன் நடராஜரையும் அம்பாளையும் சமரசம் செய்து வைக்கும் காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.








