குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் மலை மீது மலைக்கோவிலில் வைக்கப்பட்டிருந்த 5 உண்டியல்கள், மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்த 6 உண்டியல்கள் என 
11 உண்டியல்கள் காணிக்கை என்னும் பணி இன்று கோவில் நூற்றுகால் மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னதாக உண்டியல்கள் அனைத்தும் திருப்பூர் உதவி ஆணையர் தமிழ்வாணன் முன்னிலையில் உண்டியல்கள் சீல் அகற்றப்பட்டு காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.

காணிக்கை என்னும் பணி காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

காணிக்கை என்னும் பணி கலைஞர் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சிவனடியார்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் காணிக்கை தொகை முழுவதும் இந்தியன் வங்கி குளித்தலை கிளையில்
கோவில் கணக்கில் வரவு வைப்பதற்காக ஒப்படைக்கப்பட்டது.








