Home கரூர் செய்திகள் கரூரில் வரும் 28ல் பென்சனர் குறைதீர் கூட்டம்

கரூரில் வரும் 28ல் பென்சனர் குறைதீர் கூட்டம்

9
0

ரூர்:திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் வரும், 28ல் கரூரில் நடக்கிறது.

இதுகுறித்து, திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கமிஷனர் ஆஷிஷ்குமார் திரிபாதி வெளியிட்ட அறிக்கை:

பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம் வரும் 28 காலை, 9:00 மணி முதல் மாலை, 5:45 மணி வரை, கரூர் எல்லைமேடு வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. அதில், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு குறைகளை, உரிய ஆவணங்களுடன் தெரிவித்து, தீர்வு பெறலாம்.

ஓய்வூதியம் பெறுவோர், தங்களது டிஜிட்டல் உயிர்வாழ்வு சான்றுகளை முகாமில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Previous articleஅர்ஷத் நதீமை அழைத்ததற்காக என்னுடைய நேர்மையை கேள்வி கேட்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வேதனை
Next articleஇந்தியா, பாகிஸ்தான் அரசுகள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்: ஐ.நா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here