கரூர் வெங்கமேடு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி முதல் நாளை சுவாமி ஒரு லட்சம் பணம் அலங்காரத்தில் காட்சி

மார்கழி மாத முதல் நாளை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்

கரூர் வெங்கமேடு அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயத்தில் மார்கழி முதல் நாளை முன்னிட்டு ஒரு லட்சம் மதிப்பிலான பண அலங்காரம் நடைபெற்றது.

இந்நிலையில் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ச்சியாக ஐயப்பனுக்கு பட்டாடை உயர்த்தி வண்ண மாலை அணிவித்த பிறகு

ஆலயத்தின் சிவாச்சாரியார் பக்தர்கள் வழங்கிய 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்த பிறகு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் வெங்கமேடு அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத முதல் நாள் பண அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர் நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

Previous articleமகிளிப்பட்டியில் குரங்குகள் ஆட்டம் — மக்கள் அச்சத்தில் அவதி!
Next articleகரூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here