அரவக்குறிச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ரங்கராஜ் நகர் பகுதியில் தமிழகவெற்றி கழகம் சார்பில் புதிய கட்சி அலுவலகத்தை அரவக்குறிச்சி சட்டமன் தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார் ஏற்பாட்டில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்து கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்களுக்கு சேலை, வேஸ்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

புதிய அலுவலகம் திறக்கப்பட்டதாலும், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட நிகழ்ச்சியை அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது அந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் நிர்வாகிகள் கட்சி அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உள்ளிட்ட பல்வேறு பணிகளை முன்னெடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.








