கரூரில் வருகின்ற 17ஆம் தேதி முப்பெரும் விழா ஏற்பாடுகள் தீவிரம்- மூன்று லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு.

கரூரில் வருகின்ற 17ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா கோடங்கிபட்டி எந்த இடத்தில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி சிறப்புடன் செய்து வருகிறார் .

கடந்த வாரத்தில் முப்பெரும் விழாவிற்கான பந்தக்கால் நடுப்பணி தொடங்கி தற்போது வரை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 100 ஏக்கரா பரப்பளவில் கொண்ட கோடங்கிபட்டி என்ற இடத்தில் திமுகவின் முப்பெரும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முகப்பு அமைக்கும் பணி மின்விளக்கு பொருத்தும் பணி விழா மேடை அமைக்கும் பணி என 24 மணி நேரமும் வேலை ஆட்கள் தங்களது பணிகளை இடைவிடாது செய்து வருகின்றனர்.

இதனை காலை, மாலை, இரவு என மூன்று வேலைகளும் முன்னால் அமைச்சரும் ,கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜி தனது கட்சி நிர்வாகிகளுடன் விழா பந்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அமைச்சர் கே என் நேரு விழா பந்தலை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து இன்று ஈரோடு அமைச்சர் முத்துசாமி விழா பந்தலை பார்வையிட்டு ஆலோசனைகளையும் வழங்கினார்.வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு இதன் முன்னோட்டமாக கரூரில் முப்பெரும் விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅரவக்குறிச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Next article2026 தேர்தலுக்கு கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா அடித்தளமாக அமையும், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் பேட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here