கரூர் மாநகராட்சி ராயனூர் அருகே மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழப்பு – வனத்துறை அதிகாரிகள், மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை.

 

கரூர் மாநகராட்சி ராயனூர் அடுத்த ஆட்சிமங்கலம் அருகே தென்னந்தோப்பு பகுதியில் மர்மமான முறையில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காட்டெருமை இறந்து கிடந்ததை கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

 

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மற்றும் கால்நடை மருத்துவர்கள் அதே இடத்தில் காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்தனர். காட்டெருமை எவ்வாறு இறந்தது என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

 

பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அப்பகுதியில் குழி தோண்டப்பட்டு காட்டெருமை அடக்கம் செய்ய உள்ளனர்.

 

 

Previous articleஉலக கேமரா தினம்
Next articleகரூர் அருகே பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு சொந்தமான சேமிப்பு குடோனில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறிந்து செயழிலக்க வைக்கும் ஒத்திகை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here