கரூர் ரயில்வே காலனி ஸ்ரீ மதுரை வீரன் சுவாமிக்கு அம்மாவாசை அபிஷேகம்

 

கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே காலனி அருள்மிகு தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் வீற்றிருக்கும்

அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் ஸ்வாமிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பெடி, அரிசிமாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று

தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் மதுரைவீரர் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலை அணிவித்த பிறகு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்திறன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் ரயில்வே காலனி அருள்மிகு ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் ஆலய மதுரைவீரன் சுவாமிக்கு நடைபெற்ற கார்த்திகை மாத அமாவாசை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Previous articleஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தங்க தேரோட்ட நிகழ்ச்சி
Next articleமாரியம்மன் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்ட விழா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here