தேர் வீதி மாரியம்மன் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்ட விழா

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் மாரியம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மின்விளக்குகளால் தங்க தேரில் மாரியம்மன் கொழுவிற்க செய்தனர்.

அதை தொடர்ந்து ஆலயத்தின் பூசாரி மாரியம்மனுக்கு தூப தீபங்கள் காட்டிய பிறகு மேல தாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து புறப்பட்ட சுவாமியின் தங்க தேரோட்டம் முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது.

கரூர் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத அமாவாசை தங்க தேரோட்ட நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து தங்க தேரோட்டத்தை கண்குளிர கண்டு மகிழ்ந்தனர்

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.








