கரூர்:”கரூர் மாவட்டத்தில், 50 நீர்நிலைகளில் வண்டல், களிமண் ஆகியவற்றை கட்டணம் இல்லாமல் வெட்டி எடுத்து செல்ல, இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்,” என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட் டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.
பிறகு, கலெக்டர் தங்கவேல் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில், 6,051 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் பயிர் சாகுபடிக்காக மட்டும், 125 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு உள்ளன.








