கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு

கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் காயத்ரி தேவிக்கு கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு

எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் அபிஷேக பொடி அரிசி மாவு, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ச்சியாக காயத்ரி தேவிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அனுவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூரம் ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய காயத்ரி தேவிக்கு கார்த்திகை மாத அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் மற்றும் ஆலய சிவாச்சாரியார் இணைந்து சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்தனர்.








