கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான முதல் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில்

கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென மாலை வேளையில் கரு மேகங்கள் சூழ்ந்து கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர் பஜார், தான்தோன்றி மலை, பசுபதிபாளையம், காந்திகிராமம், வெங்கமேடு, சின்ன ஆண்டான் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

திடீரென பெய்த மழையால் பள்ளி முடிந்து வீடு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலை முடிந்து வீடு செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Previous articleஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத அபிஷேகம்
Next articleஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here