கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து எழுத்தனர்

ஐப்பசி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தங்க தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க தங்கத்தேரில் மாரியம்மன் காட்சியளித்தார்.

அதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஆலய மண்டபத்திலிருந்து தங்க தேரை வடம்பிடித்து இழுத்தவாறு ஆலயம் வளம் வந்தனர்.

தொடர்ந்து ஆலய மண்டபம் வந்தடைந்த மாரியம்மன்க்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

கரூர் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி வெள்ளிக்கிழமை தங்க தேரோட்ட நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய பரம்பரை அறங்காவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்








