கரூரில், நடைபெற்ற 5 மற்றும் 10 கிலோ மீட்டர் மாரத்தான் மற்றும்
3 கிலோ மீட்டர் அதிவேக நடைப் போட்டியை தொடங்கி வைத்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி 

கரூரில் இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா் சங்கம், அனைத்து வணிகா்கள் சங்கம் சாா்பில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் கரூரின் வா்த்தக இலக்கு ரூ.50 ஆயிரம் கோடியை அடையும் வகையில் சிஐஐ-ன் 2030 விஷன் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இன்று கரூரில் மாரத்தான் போட்டி மற்றும் அதிவேக நடை போட்டி நடைபெற்றது. இதில் 10 கி.மீ., 5 கி.மீ., மாரத்தான் ஆண்களும், சிறுவர், சிறுமியருக்கு 5 கி.மீ., மாரத்தான்,3 கி.மீ., வாக்கத்தான் போட்டி நடைபெற்றது.

கரூா் திருவள்ளுவா்மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

மேலும், 3 கிலோ மீட்டர் அதிவேக நடைப் போட்டியில் செந்தில்பாலாஜியும் கலந்து கொண்டு நடந்தார்.

இந்த போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 5,000 ரூபாய், மூன்றாம் பரிசாக, 3,000 ரூபாய், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Previous articleகரூரில் 10 வயது சிறுமி நேருவின் பெயரை  4,545 முறை எழுதி ஓவியமாக வரைந்து உலக சாதனை!
Next articleஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தங்க தேரோட்ட நிகழ்ச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here