கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு இடத்திலும் சூரியனின் தாக்கம் என்பது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு கூட பலரும் யோசிக்கிறார்கள். அதையும் மீறி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டால் போதும் சூரிய ஒளி கதிர்களால் நம்முடைய நிறம் கருமையாக மாறிவிடும். அப்படி கருமையாக மாறிய நிறத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு செய்ய வேண்டிய ஒரு ஃபேஸ் பேக் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
முகக் கருமையை நீக்கும் ஃபேஸ் பேக் ஒவ்வொரு கோடை காலத்திலும் வீட்டிற்கு வெளியே சென்று வேலை செய்யக்கூடிய நபர்களாக இருந்தாலும் சரி படிக்க செல்லும் மாணவ மாணவியராக இருந்தாலும் சரி சூரிய வெப்பத்தினால் அவர்களுடைய நிறம் கருமை அடைவதை பார்த்திருப்போம். அந்த அனுபவம் நமக்குமே உண்டாகி இருக்கும். அந்த கருமையை நீக்குவதற்கு பலவிதமான சன் ஸ்கிரீம்களை பயன்படுத்துவார்கள். இதை தவிர்த்து விட்டு இயற்கையிலேயே நம்முடைய இயல்பான நிறத்தை திரும்பக் கொண்டு வருவதற்கு உதவக்கூடிய ஃபேஸ் பேக்கை பற்றி பார்ப்போம்.
இதற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள் இருந்தால் போதும். அதில் ஒன்று பச்சரிசி. பொதுவாகவே பச்சரிசி என்பது நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய கருமையை நீக்குவதோடு சரும துவாரங்களில் இருக்கக்கூடிய அழுக்குகளையும் முற்றிலும் நீக்கி பளிச்சென்ற முகத்தை தரும். இந்த பச்சரிசி மாவில் நாம் சேர்க்கக்கூடிய சாறு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுதான் பீட்ரூட் சாறு. பீட்ரூட்டை நம்முடைய முகத்தில் நாம் பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய சருமத்தின் நிறம் என்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இதில் இருக்கக்கூடிய சத்துக்கள் நம்முடைய சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாக திகழ்கிறது. ஒரு பீட்ரூட்டை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு கேரட் துருவுவது போல் துருவி ஒரு வடிகட்டியை பயன்படுத்தி சாறை மட்டும் தனியாக பிரிந்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு ஸ்பூன் அளவுக்கு பச்சரிசி மாவை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுவிட்டு அதை பேஸ்ட் ஆக தயார் செய்வதற்கு தேவையான அளவு பீட்ரூட் சாறு போட்டு கலந்து கொள்ளுங்கள். விருப்பம் இருப்பவர்கள் இதனுடன் விட்டமின் ஈ கேப்ஸ்யூல் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது பாதாம் எண்ணெயை சேர்த்துக் கொள்ளலாம். பேஸ்ட் ஆக தயார் செய்த பிறகு, இதை அப்படியே நம்முடைய முகம் கை கால்களில் நன்றாக தடவி 20 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீரை சேர்த்து வட்ட வடிவில் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய கருமை நீங்குவதோடு சருமத்தின் நிறம் அதிகரிக்கும். மேலும் சருமம் இயற்கையிலேயே பளிச்சென்று பிரகாசமான தோற்றத்தை தரும்.










