திடீரென வெளியில் ஒரு இடத்திற்கு கிளம்ப வேண்டி இருக்கிறது என்றால் அந்த சமயத்தில் நம் முகத்தை பிரைட்டாக, பொலிவாக வைத்துக் கொள்வது சிரமமாக இருக்கும். இன்ஸ்டன்ட் ஆக நம் முகத்தை எப்படி இருபதே நிமிடத்தில் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை வைத்து பொலிவாக மாற்றுவது? என்னும் அழகு குறிப்பு சார்ந்த ரகசியத்தை தான் இந்த பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.
இன்ஸ்டன்ட் க்ளோ கொடுக்கக் கூடிய இந்த ஃபேஸ் பேக் போடுவதற்கு 10 நிமிடம் போதும். தயாரிப்பது முதல் மேக்கப் போடுவது வரை அடுத்த 10 நிமிடத்தில் எல்லா வேலையும் முடிந்து போய்விடும், சீக்கிரமே வெளியில் கிளம்பி சென்று விடலாம். அவசர நேரத்தில் கை கொடுக்கக் கூடிய இந்த அருமையான ஃபேஸ் பேக் நம் முகத்தை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.
முதலில் இதற்கு வீட்டில் இருக்கும் சில பொருட்கள் தேவை. அவை என்னென்ன?
- தக்காளிச் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்
- உருளைக்கிழங்கு சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – ஒரு டேபிள் ஸ்பூன்
- முல்தானிமட்டி – ஒரு டேபிள் ஸ்பூன்
- காய்ச்சாத பால் – ஒரு டேபிள் ஸ்பூன்
எல்லாமே சம அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் பாதி தக்காளியை வெட்டி அதை நசுக்கி கூழாக்கி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல அரை உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் போல் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். தக்காளி சாறு மற்றும் உருளைக்கிழங்குடன் பச்சை பால் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையுடன் தேவையான அளவிற்கு முல்தானிமட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
பின் கடைசியாக கற்றாழை ஜெல் இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் இதனை தவிர்த்துக் கொள்ளலாம். ஒரு முழு கற்றாழை மடலில் இருந்து கொஞ்சம் போல வெட்டி எடுத்து வாருங்கள். நன்கு அலசி சுத்தம் செய்த பின்பு உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்து அதையும் நன்கு அலசி பின்னர் கூழ் போல செய்து கொள்ள வேண்டும். இந்தக் கூழ் பசை போல வரும். இதையும் சேர்த்து நன்கு பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். இதையும் படிக்கலாமே: சூரிய கிரகண பரிகாரம் 2025 இந்த பேஸ்டை முகத்தில் எல்லா இடங்களிலும் பேக் போல போட்டுக் கொள்ள வேண்டும். உதடு மற்றும் கண்களை தவிர்த்து கழுத்து பகுதிகளில் கூட இதை அப்ளை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் பேக் போடும் பொழுது மேல் நோக்கியபடி விரல்களால் மசாஜ் செய்து கொண்டே போடுங்கள். அப்போதுதான் சருமம் நன்கு இறுக்கமடையும். சருமம் இறுகி சரும துவாரங்கள் மூடினால் தான் நம் சருமம் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும். இந்த முறையில் நீங்கள் பேக் போட்ட பின்பு நன்கு உலர விடுங்கள். பத்து நிமிடம் பேன் காற்றில் உலரவிட்டால் நன்கு காய்ந்து விடும். அதன் பின்னர் ஒரு ஈரத்துணி அல்லது காட்டன் டிஷ்யூ போன்றவற்றை பயன்படுத்தி துடைத்து எடுக்க வேண்டும், முகத்தை கழுவ கூடாது. இப்போது முகம் இன்ஸ்டன்ட் ஆக முன்பு உள்ளதை விட நல்ல பொலிவாக காட்சி தரும். பிறகு நீங்கள் சாதாரணமாக என்ன மேக்கப் போடுவீர்களோ, அதை போட்டுக் கொண்டு போக வேண்டியது தான்.










