ஆனி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இன்று நந்தி பகவானுக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
https://www.instagram.com/reel/DLP2kTaxOZ3/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
ஐந்து ரோடு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத கோடீஸ்வரன் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர் எலுமிச்சை சாறு திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார் .

தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்திடன் மகா தீபாராதனை நடைபெற்றது.








