2026 தேர்தலுக்கு கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா அடித்தளமாக அமையும், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் பேட்டி.
கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோடங்கிபட்டி பகுதியில் திமுக முப்பெரும் விழா வருகின்ற 17ஆம் தேதி புதன்கிழமை மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த விழாவுக்கான மேடை பந்தல், ஆர்ச், அமைக்கும் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது

இந்நிலையில் அங்கு நடைபெற்று வரும் பணிகளை செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அமைச்சர் மு.பெ. சாமிநாதன் செய்தியாளரிடம் கூறுகையில்:
2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு அடித்தளமாக இந்த முப்பெரும் விழா அமையும், முப்பெரும் விழா நிகழ்வில் தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார்








