மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் 1952ல் பணம் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 1200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தவர். சிறந்த பாடகரும் ஆன இவர் தமிழ்த்தாய் வாழ்த்து நீராறும் கடலுடுத்த பாடலுக்கு இசையமைத்து சிறப்பித்தவர். கீ போர்டு, பியானோ, ஆர்மோனியம் ஆகிய இசைக் கருவிகளை பயன்படுத்துவதில் வல்லவரானவர் இவர்.










