கவிஞர் கண்ணதாசன்.
முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட இவர், திரைப்பட பாடலாசிரியராக 1947ல் அறிமுகமாகி 1969ல் வெளிவந்த குழந்தைக்காக திரைப்படத்தில் இவர் எழுதிய தேவன் வந்தான்.. தேவன் வந்தான்… என்ற பாடலுக்கு தேசிய திரைப்பட விருதும், இவர் எழுதிய சேரமான் காதலி நாவலுக்கு சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார். சண்டமாருதம், திருமகள், திரைஒலி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்த இவரது பிறந்தநாள் இன்று.










