கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், லாலாபேட்டை காவல் நிலைய சரகம், மேலதாளியாம்பட்டி சண்முகம் என்பவரது தோட்டம் அருகே 21.06.2025 ஆம் தேதி மதியம் ஆடு மேய்த்து கொண்டிருந்த லட்சுமி துரைராஜ், மேலதாளியாம்பட்டி, கரூர் என்பவரை அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத நபர் கை மற்றும் கால்களை துணியால் கட்டி அவர் அணிந்திருந்த மஞ்சள் தாலி கயிற்றில் இருந்த ரூபாய் 60,000/- மதிப்புள்ள சுமார் 1 ¼ சவரன் தாலி, குண்டு மற்றும் தங்க குழல் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் உத்தரவு படி குளித்தலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் லாலாபேட்டை காவல் ஆய்வாளர் புஷ்பகனி, உதவி ஆய்வாளர் உதயகுமார் மற்றும் குளித்தலை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு 23.06.2025 ஆம் தேதி மேலதாளியாம்பட்டி சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பவம் நடந்த அன்று சுற்றித் திரிந்தவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு மணிகன்டண், 22/25, த/பெ.ராஜேந்திரன், வடக்குகளம், மேலதாளியாம்பட்டி, கிருஷ்ணராயபுரம் தாலுகா, கரூர் மாவட்டம் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்படி லட்சுமி என்பவர் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது அவரிடமிருந்து நகைகளை கொள்ளையடித்தாக ஒப்புக்கொண்டவரை கைது செய்து அவர் வீட்டில் வைத்திருந்த சுமார் 1 ¼ சவரன் தாலி, குண்டு மற்றும் தங்க குழல் ஆகியவற்றை கைப்பற்றி குளித்தலை நீதித்துறை நடுவர் எண்.1 அவர்களிடம் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவல் அடைப்பு பெற்று குளித்தலை கிறைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

மேற்படி கொள்ளை வழக்கில் சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து அவரிடம் இருந்து கொள்ளையடிக்கபட்ட நகைகளை மீட்ட குளித்தலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார், தலைமையிலான தனிப்படையினரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வெகுவாக பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Previous articleகரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு அபிஷேகம்
Next articleமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் அவருக்கு இன்று பிறந்தநாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here