கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

கரூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர் பஜார், பசுபதிபாளையம், காந்திகிராமம், தான்தோன்றி மலை,

சின்ன ஆண்டான் கோவில் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தவாறு செல்கின்றனர்.

Previous articleஸ்ரீ வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத சிறப்பு அபிஷேகம்
Next articleஉலகின் முதல் சிறுதுளை மூலமாக அறுவை சிகிச்சை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here