கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய மூலவர் கணபதிக்கு ஐப்பசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க கவச அலங்காரம்

ஐப்பசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கணபதி ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கும் உற்சவர் கணபதிக்கும் எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று

அதன் தொடர்ச்சியாக மூலவர் கணபதிக்கும் உற்சவர் கணபதிக்கும் பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு மூலவர் கணபதிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது.

தொடர்ச்சியாக ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.








