கரூரில் புகழ்பெற்ற ஆலயமான கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நடை சாத்தப்பட்டது

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் இங்கு மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

  இந்த நிலையில்  இன்று காலபைரவர் அவதார திருநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஆலயத்தில் அருகே ஒருவர் இயற்கை எய்த காரணத்தால் கோவில் நடை காலை சாத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று மாலை கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் ஆலய வாசலில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதில் ஆலயம் சுற்றியுள்ள பகுதியில் ஒருவர் இயற்கை எய்திய காரணத்தால் இன்று முழுவதும் கோவில் நடை திறக்கப்படாது. அதை தொடர்ந்து நாளை ஆலயம் முழுவதும் சுத்தம் செய்த பிறகு நடை திறக்கப்படும் என அறிவிப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று நடைபெறவிருந்த காலபைரவர் அவதார திருநாள் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆலயத்தில் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிறப்பு பூஜைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வருகின்றனர்.

Previous articleகரூர் வஞ்சுலீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்
Next articleமூக்கணாங்குறிச்சி வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here