ஏப்.26.

சென்னை ரெஜிமண்டல் மையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தார்களின் குறைபாடுகளை களைய தமிழ்நாடு முழுவதும் மேற்படி சென்னை ரெஜிமண்டல் மையத்தில் பணிபுரியும் 8 இராணுவ வீரர்கள் அடங்கிய Bike Rally பயணம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்திலிருந்து கேப்டன் கர்தீப் சிங், வெலிங்டன், ஊட்டி என்பவர் தலைமையில் Bike Rally பயணமாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா, உத்தரவுப்படி கரூர் மாவட்ட எல்லையான வைரமடையில் காவல்துறையினர் விசாரணை சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்பு ஊர்வலமாக கரூர் சரகத்திற்கு உட்பட்ட முக்கிய வீதி வழியாக பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்து, மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பதாரிடம் குறைகளை கேட்டறிந்தார்கள்.

பின்பு, மேற்படி கேப்டன் கர்தீப் சிங், வெலிங்டன், ஊட்டி என்பவர் தலைமையில் Bike Rally குழுவினர் கரூர் மாவட்ட காவல் அலுவலகம் வருகை புரிந்தவர்களுக்கு கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா, சிறப்பான வரவேற்பு அளித்து, அவர்களுடன் கலந்து உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏடிஎஸ்பி. ஜெயசந்திரன், கரூர் மாவட்ட முன்னாள் இராணுவ வீரர்களின் நலச்சங்க மாவட்ட தலைவர் திரு. முருகேசன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

Previous articleஇந்தியா, பாகிஸ்தான் அரசுகள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்: ஐ.நா
Next articleஇயல்பை விட அதிகமாக கரூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here