கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

9
0

கரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை மாத பிரதோஷ விழாவில், நேற்று ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு நேற்று மாலை, 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next articleகுடியரசு தலைவர் திரவுபதி முர்மு போப் பிரான்சிஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here