ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்ற வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ உன்மத்த வாராஹி அம்மனுக்கு ஆஷாடன நவராத்திரி முன்னிட்டு இன்று 2 நாள் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

 

நிகழ்ச்சி முன்னிட்டு வாராகி அம்மனுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகபெடி, அரிசி மாவு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக வாராஹி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

 

தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் மினி பேருந்து நிலையம் கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆஷாடன நவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் இருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Previous articleஅரவக்குறிச்சி தடா கோவிலில் தமிழக அரசின் புகைப்பட கண்காட்சி
Next articleபோதையில் வாகனத்தை தாறுமாறாக இயக்கி அப்பாவிகள் மீது மோதி விபத்து – விழிப்புணர்வு நாடகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here