கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட பிறகு முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் பேசுகையில் வருகின்ற 9-ம் தேதி துணை முதலமைச்சர் கரூர் வருகை ஒட்டி ஆட்சியர் அலுவலகத்தில் கட்டி முடிக்கப்பட்ட அறிவியல் பூங்கா திறப்பு,

பிரேம் மகாலில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், காமராஜ் மார்க்கெட் திறப்பு மற்றும் புதிய பேருந்து நிலையம் திறப்பு, முடிந்த பணிகள் துவக்கி வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அன்று இரவு ராயனூர் தளபதி திடலில் திமுக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து 9-ம் தேதி மூன்றுக்கு மேற்பட்ட அரசு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் 8-ம் தேதி இரவு குளித்தலை தரைவழி மார்க்கமாக கரூர் வந்து அடைவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.









