சென்னை: வரும் ஜூன் 24 மற்றும் 25-ம் தேதிகளில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமைக் கழக எம்ஜிஆர் மாளிகையில், வரும் ஜூன் 24 மற்றும் 25ம் தேதிகளில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அதன்படி, ஜூன் 24ம் தேதி காலை 9.30 மணிக்கு, சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கும், பகல் 3.30 மணிக்கு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கான கூட்டம் நடைபெறும்.









