Rajinikanth Felicitates Writer Kalaignanam

”காஷ்மீரில் அமைதி நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதனை கெடுக்க முயற்சி செய்கின்றனர்,” என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி கூறியதாவது: பயங்கரவாத தாக்குதல் சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் அமைதி நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை.

அதனை கெடுக்க இதுபோன்று செய்கின்றனர். அதனை செய்தவர்களுக்கும், அதன் பின்னால் உள்ளவர்களுக்கும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்று மீண்டும் செய்ய கனவில் கூட நினைக்கக்கூடாது. மத்திய அரசு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Previous articleஉச்ச நீதிமன்றத்தில் வக்ப் சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது மத்திய அரசு பதில் மனு !
Next articleடாஸ்மாக் அமலாக்கத்துறை சோதனை :தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட் சென்றுள்ளது !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here