கரூர் வஞ்சுலீஸ்வரர் ஆலயத்தில் கால பைரவர் அவதாரத் திருநாளை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம்.

இன்று காலபைரவர் அவதார திருநாளை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் வீற்றிருக்கும் கால பைரவனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று வரும்.

நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ வஞ்சுலீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கால பைரவருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக காலபைரவருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வடைமாலை சாற்றப்பட்டது, தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

உழவர் சந்தை வஞ்சுலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற காலபைரவர் அவதார திருநாள் சிறப்பு தேய்பிறை அஷ்டமி அலங்காரம் மற்றும் அபிஷேகத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Previous articleமழைநீர் சேகரிப்பு விழிப்புணர் பேரணி
Next articleகரூரில் புகழ்பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நடை சாத்தப்பட்டது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here