கரூர் வெங்கமேடு அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா

கரூர் வெங்கமேடு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் ஆலய அஷ்டமந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்தியேக யாகசாலை அமைத்து முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்தை ஆலய சிவாச்சாரியார் மேளதாளங்கள் முழங்க தலையில் சுமந்தவாறு ஆலயம் வளம் வந்து ஆலய கோபுரம் வந்தடைந்தார்.

அதைத் தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு ஆலய ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

வெங்கமேடு அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.








