நாம் வாழும் இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் படும் இன்னல்களும் துன்பங்களும் சொல்லில் அடங்கா. இவை அனைத்தும் நம்முடைய பிறவி பலன் அதாவது கர்மபலன் என்று சொல்கிறார்கள். இது மட்டும் இன்றி கிரக தோஷங்கள், நேரம் சரியில்லாதவை போன்றவையும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இவை அனைத்திலும் விட முக்கியமான ஒன்று பித்ரு தோஷம்.

இந்த பித்ரு தோஷம் மட்டும் ஒரு குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பம் அத்தனை எளிதில் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடிவதில்லை. இவை அனைத்திலிருந்தும் விடுபட்டு நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ இந்த சித்திரை மாதத்தில் வரக்கூடிய அமாவாசையில் நாம் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தோஷம் நீங்க அமாவாசை வழிபாடு அமாவாசை திதியானது மாதம்தோறும் வந்தாலும் ஒரு சில மாதங்களில் வரும் இந்த அமாவாசை மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் நாளைய தினம் சித்திரை மாதத்தில் வரக்கூடிய அமாவாசையில் நாம் செய்யக்கூடிய சில விஷயங்கள் நம்முடைய வாழ்க்கையில் பல மடங்கு பயனுள்ளதாக மாற்றும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

தலில் அமாவாசை எப்போது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த அமாவாசையானது 27.4.25 ஞாயிற்றுக்கிழமை அதிகாலைத் துவங்கி 28.4.25 திங்கட்கிழமை அதிகாலை வரை உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அமாவாசை திதி இருக்கும் பட்சத்தில் அன்றைய தினமே நாம் அமாவாசை அன்று செய்ய வேண்டியவற்றையெல்லாம் செய்யலாம். அமாவாசை என்றாலே முதலில் நாம் செய்ய வேண்டியது நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது தான்.

ஆகையால் அமாவாசை திதி கொடுப்பவர்கள் அன்றைய தினத்தின் மதியத்திற்குள் கொடுத்து விடுவது நல்லது. இது நம்முடைய குடும்பத்தை பித்ரு தோஷம் வராமல் காக்கும். அடுத்ததாக அமாவாசை ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் அன்றைய தினத்தில் சூரிய பகவானை வழிபடுவதும் சிறந்த பலனை தரும். அதற்கு நம் வீட்டின் பூஜை அறையில் ஒரு சுத்தமான சோம்பில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பக்கத்தில் ஒரு சிறிய அகல் விளக்கு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றங்கள்.

இத்துடன் உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு நெய்வேத்தியத்தையும் படைத்து சூரிய பகவானை நினைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த பிராத்தனையானது உங்களுடைய வேலை தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வதுடன் வருமானத்திற்கான வழியையும் கொடுக்கும். வேலை வருமானம் போன்றவற்றுக்கு காரிய கர்த்தாவாக விளங்க கூடியவர் சூரிய பகவான். ஆகையால் சித்திரை அமாவாசையில் இந்த சூரிய வழிபாடு நல்ல பலனை தரும் என்று சொல்லப்படுகிறது.

அடுத்ததாக செய்ய வேண்டியது சந்திர வழிபாடு அமாவாசையில் அன்று செய்யப்படும் சந்திர வழிபாடும் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. அதற்கு அன்றைய தினத்தில் உங்கள் வீட்டில் அருகில் உள்ள நவகிரக ஆலயத்திற்கு சென்று நவகிரகத்தை வழிபட வேண்டும். நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து சந்திர பகவானை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளும் போது நம்முடைய மனம் தெளிவடைவதுடன் திடமான முடிவுகளை எடுக்கவும் வாழ்க்கையை நாம் செம்மையாக கொண்டு செல்லவும் இந்த வழிபாடு உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது. இவை அனைத்திலும் விட முக்கியமானதாக கருதப்படுவது அன்றைய தினத்தில் அன்னதானம் செய்வது.

தானத்திலே சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்வார்கள் அன்றைய தினத்தில் நம்முடைய முன்னோர்களை நினைத்து யாரேனும் ஒருவருக்காவது உணவு தானம் செய்யுங்கள். இது நம் முன்னோரின் ஆசியை பெற்று தருவதுடன் நம்முடைய சந்ததியினரும் வாழ்க்கையும் சிறப்புடன் வாழவும் மென்மேலும் முன்னேற்றமாக செல்லவும் உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது.

Previous articleகருமையான கூந்தலை தரும் இயற்கையான ஹேர் டை
Next articleவீட்டில் இருக்கும் தீய சக்தியை விரட்டியடிக்கும் மந்திரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here