கரூரில் வல்வில் ஓரி விழா திருவுருவப் படத்திற்கு தமிழக நீதி கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

 

ஆண்டுதோறும் ஆடி 18 நாளில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை ஆண்ட, வல்வில் ஓரிமன்னனுக்கு அரசு விழா நிகழ்ச்சிகள் இரண்டு நாட்கள் நடைபெறுவது வழக்கமான இந்த நிலையில் கலந்து கொள்வதற்காக இன்று கரூர் மாவட்டத்தில் இருந்து தமிழக நீதி கட்சி சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் வல்வில் ஓரி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

பின்னர் அக்கட்சியினர் கரூரில் இருந்து 10க்கும் மேற்பட்ட வாகனத்தில் கொல்லிமலையில் வல்வில் ஓரி மன்னன் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய சென்றனர்.

Previous articleநெரூர் சுயம்பு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவிலில் 16 ஆம் ஆண்டு நாத உற்சவ திருவிழா
Next articleதேர்ச்சி எண்ணிக்கையை தாண்டி தரமான கல்வியை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் -அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here