ஆடி 18 முன்னிட்டு பல்வேறு காவிரி அமராவதி ஆறுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற ஒரு நிலையில் ஆடி 18 மறுநாள் கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் ஆலயத்தில் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

 

இந்த தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வுக்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் மகாலட்சுமி அம்மன் ஆலயம் வருகை தந்து விரதம் இருந்து இந்த சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

 

மகாலட்சுமி அம்மன் ஆலய பூசாரி அருள்வாக்குடன் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்த பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாவனை காட்டப்படும் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.

 

ஆண்டு தோறும் ஆடி 18 மறுநாள் நடைபெறும் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து இந்த சிறப்பு நிகழ்ச்சியை கண்டு களித்து வருகின்றனர் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல்துறை உத்தரவு கிணங்க மாயனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous articleக.பரமத்தி பகுதியில் 5-ம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி மற்றும் நாட்டு விதை திருவிழா
Next articleநெரூர் சுயம்பு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவிலில் 16 ஆம் ஆண்டு நாத உற்சவ திருவிழா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here