இந்தியாவில் சாம்சங் கேலக்சி எம்56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். நீண்ட காலத்துக்கு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எம்’ வரிசையில் கேலக்சி எம்56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் கேலக்சி ஏ56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேலக்சி எம்56 – சிறப்பு அம்சங்கள்

  • 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • ஆறு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் ஆறு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் உறுதி அளிக்கப்பட்டுள்ளது
  • Exynos 1480 சிப்செட்
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
  • 5,000 mAh பேட்டரி
  • 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • டைப்-சி யுஎஸ்பி
  • பின்பக்கத்தில் 3 கேமரா உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் இந்த போன் கிடைக்கிறது
  • இந்த போனின் விலை ரூ.24,999 முதல் ஆரம்பமாகிறது
Previous articleChatGPT-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசமாக கிடைக்கும்!
Next articleஇந்தியாவில் Redmi A5 போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here