இன்று சர்வதேச ஒலிம்பிக் நாள்
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், உலகளாவிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஒலிம்பிக் இயக்கத்தின் மூலம் மேம்படுத்துவதை குறிக்கும் வகையிலும், 1894, ஜூன் 23ல் பாரிஸில் உள்ள சோர்போன்னே (Sorbonne) பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிறுவப்பட்ட நாளை நினைவு கூரும் வகையிலும் 1948முதல் ஆண்டு தோறும் ஜூன் 23ல் (இன்று) உலகளவில்
சர்வதேச ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச ஒலிம்பிக் தினத்தின் மூன்று முக்கிய தூண்கள்.
1- கண்டுபிடிப்பு (Discover)
2- கற்றல் (Learn)
3- நகர்வு (Move)
விளையாட்டு போட்டிகளின் இந்த மூன்று தூண்களும் தேசிய ஒலிம்பிக் கமிட்டிகளால் விளையாட்டு, கல்வி மற்றும் கலாச்சாரச் செயல்பாடுகளில் பிரயோகப் படுத்தப்படும்.












