*கரூரில் ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் விதமாக பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி, பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்

சிறுவர், சிறுமியருக்கு கேக் வழங்கி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்

கரூர் மாவட்டம் முழுவதும் நள்ளிரவு 2026-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது.

நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், பொது இடங்களில் மக்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதனிடையே, ஏ.டி.எஸ். பி பிரபாகரன் தலைமையில் கரூர் பேருந்து நிலைய ரரவுண்டானா அருகில் காவல்துறை மற்றும் பொதுமக்களுடன் இணைந்து புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில்,கேக்குகளை வெட்டியதுடன், சிறுவர், சிறுமியருக்கும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.









