கரூர் திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை இன்று செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கரூர் திருமாநிலையூர் பகுதியில், 40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது இதன் 80 சத பணிகள் நிறைவுற்றள்ளன. மீதி உள்ள 20 சதவீதம் ஒரு மாத காலத்திற்கு நிறைவு பெற உள்ளது.
விரைவில் தமிழக முதல்வர் கரூரில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்க வைக்கும் நிகழ்ச்சி கலந்து கொள்ள உள்ளார். அந்த நிகழ்ச்சியில் புதிய பேருந்து நிலையத்தை அவர் திறந்து வைக்க உள்ளார் என்றார்.








