வளர்பிறை சஷ்டி முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் எல் ஜி பி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய்,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 

இதைத்தொடர்ந்து பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.

வளர்பிறை சஷ்டி சிறப்பு அபிஷேகத்தை காண ஏராள பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Previous articleதுணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை காலால் வரைந்து அசத்திய மாற்றுத்திறனாளி மாணவி
Next articleகலை இலக்கியக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here